அவதூறாக பேசிய தலைமையாசிரியர் பணியில் இருந்து விடுவிப்பு
அவதூறாக பேசிய தலைமையாசிரியர் பணியில் இருந்து விடுவிப்பு
UPDATED : ஜன 08, 2016 12:00 AM
ADDED : ஜன 08, 2016 11:33 AM
தர்மபுரி
:
பள்ளிக்கல்வித்துறை இயக்குனரை அவதூறாக பேசிய அரசு பள்ளி தலைமையாசிரியர், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து
தர்மபுரி சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியதாவது:
தர்மபுரி அரசு அவ்வையார் மேல்நிலைப்பள்ளியில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் முனியன், சிறப்பு திட்டத்தில், மீண்டும் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன், பெண் ஆசிரியர் ஒருவரின் மொபைல்போனில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அரூர் எம்.எல்.ஏ.,டில்லிபாபு ஆகியோர் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
இதுகுறித்து,
ஆதாரத்துடன் எனக்கு புகார் வந்தது. அதன்படி
நடத்திய விசாரணையில், முனியன் அவதூறாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கூறினார்.
