தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகில இந்திய தடகள போட்டி; பாரதியார் பல்கலைக்கு 5 பதக்கம்

அகில இந்திய தடகள போட்டி; பாரதியார் பல்கலைக்கு 5 பதக்கம்

அகில இந்திய தடகள போட்டி; பாரதியார் பல்கலைக்கு 5 பதக்கம்


UPDATED : ஜன 08, 2016 12:00 AM

ADDED : ஜன 08, 2016 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2016 12:00 AM ADDED : ஜன 08, 2016 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: அகில இந்திய தடகள போட்டியில் பாரதியார் பல்கலை
, 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்துடன், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பல்கலைகளில், சென்னை பல்கலைக்கு அடுத்தபடியாக பாரதியார் பல்கலை 2வது இடத்தை பெற்றது.

பாட்டியாலா பஞ்சாபி பல்கலை சார்பில், 76வது அகில இந்திய தடகள போட்டி, பாட்டியாலாவில் நடந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து, 166 பல்கலைகளை சேர்ந்த 2,546 மாணவ, மாணவியர் ஆறு நாட்களாக பல்வேறு பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து மட்டும், 18 பல்கலை அணிகள் பங்கேற்றன. பாரதியார் பல்கலை சார்பில், 10 வீராங்கனைகளும்; 14 வீரர்களும் பங்கேற்றனர்.

பாரதியார் பல்கலை சார்பில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி - 200மீ., ஓட்டத்தில் தங்க பதக்கமும், 400மீ., ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் பெற்றார்.

பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த சலாவுதீன் - மும்முறை தாண்டுதலில் தங்க பதக்கமும்; என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த சுரேன் - &'டெக்காத்லான்&' பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றார். பி.எஸ்.ஜி.ஆர்.,கிருஷ்ணம்மாள் கலை அறிவியல் கல்லுாரியின் கார்த்திகா - சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார். கடந்த மாதம் நேரு ஸ்டேடியத்தில் நடந்த பாரதியார் பல்கலை அனைத்து கல்லுாரி தடகள போட்டியில், தீபன்சக்ரவர்த்தி, சலாவுதீன், கார்த்திகா ஆகியோர், தங்களது பிரிவுகளில் புதிய சாதனை படைத்தனர். அகில இந்திய அளவில் பாட்டியாலா பஞ்சாபி பல்கலை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டமும்; மங்களூர் பல்கலை 2வது இடமும் பெற்றன.

மாணவர் பிரிவில் பஞ்சாபி பல்கலை முதலிடமும்; மங்களூர் பல்கலை 2வது இடமும்; மாணவியர் பிரிவில் கோட்டயம் மகாத்மா பல்கலை முதலிடமும்; பாட்டியாலா பஞ்சாபி பல்கலை 2வது இடமும் பெற்றன. பாரதியார் பல்கலை பதிவாளர் செந்தில்வாசன், பல்கலை உடற்கல்வி இயக்குனர் முருகவேல் உள்ளிட்ட பலர் வீரர், வீராங்கனைகளை வெகுவாக பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us