UPDATED : ஜன 08, 2016 12:00 AM
ADDED : ஜன 08, 2016 11:31 AM
பரமக்குடி
: பரமக்குடியில்
வறுமை காரணமாக பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பெற்றோர்களே முன்பணம்
வாங்கிக்கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அனுப்பும் பரிதாபம்
தொடர்கிறது.
எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்தவர் நவமணி. இவரது மகன் வல்லரசு, 14., மகள் மணி,12. இவர்களில் மகன் வல்லரசு அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 8வது வகுப்பு படித்துவந்தார். மகள் மணி 6வது வகுப்பு படித்துவந்தார். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வராததால் ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். வறுமை வாட்டியதால் வேறு வழியின்றி மகன் வல்லரசை, சென்னையில் உள்ள பேக் கம்பெனி ஒன்றில் ரூ.2 லட்சம் முன்பணம் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பியுள்ளதும், மகள் மணியை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைக்கு வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதுபோன்று அதே பகுதியைச் சேர்ந்த நெசவாளர் குடும்பத்தினர் பலர் வறுமை காரணமாக குழந்தை களை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவதை வழக்க மாக கொண்டுள்ளனர். இவ்வாறு அனுப்பப்படும் குழந்தை தொழிலாளர்கள் தனியார் நிறுவனங்களில் கொத்தடிமை களாக வேலைபார்த்து வரும் அவலம் தொடர்கிறது. இடை நிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இருந்தும் மாணவர்கள் விஷ யத்தில் ஆசிரியர்கள் அலட்சி யமாக உள்ளனர்.
மாறாக குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என, கடமையை தட்டிக்கழிக்கின் றனர். இதுபோன்று குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அரசு தடைவிதித்துள்ள நிலையில், பல தனியார் நிறுவனங்கள் பெற்றோர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்களது குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் சட்டவிரோத செயல் கள் தொடர்கிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும்.
வல்லரசு தந்தை நவமணி கூறுகையில், மனைவி இறந்து விட்டநிலையில் வறுமை வாட்டிய தால் பள்ளியில் படித்து வந்த மகனை சென்னையில் உள்ள பேக் கம்பெனிக்கு ரூ.2 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்பினேன், என்றார்.
