UPDATED : ஜன 12, 2016 12:00 AM
ADDED : ஜன 12, 2016 10:04 AM
இது குறித்து தமிழ் நுால் விற்பனை மேம்பாட்டு குழும அமைப்பின் அறங்காவலர், ஆர்.எஸ்.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்ததாவது: வரும், 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர், பொங்கல் புத்தக திருவிழாவை துவக்கி வைக்கின்றனர்.
தொடர்ந்து,
24ம் தேதி வரை, அந்த விற்பனை கண்காட்சி நடைபெறும். விடுமுறை நாட்களில், காலை 11:00 மணிக்கும், மற்ற நாட்களில் மதியம், 2:00 மணிக்கும்
கண்காட்சி துவங்கும். அனைத்து நாட்களும், இரவு 8:30 மணி வரை அரங்குகள் திறந்திருக்கும். புத்தக விற்பனைக்காக,
240 அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில்,
தமிழ், ஆங்கிலம்
உள்ளிட்ட மொழிகளின், ஒரு கோடி புத்தகங்கள் இடம் பெற உள்ளன.
அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீத தள்ளுபடி உண்டு. குறிப்பிட்ட
நுால்களுக்கு, அதிக தள்ளுபடியும் இருக்கும்.
மைதானத்தில், ஏ.டி.எம்., மையம், உணவு அரங்குகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். நுழைவு கட்டணம்புத்தக
விற்பனை கண்காட்சி அரங்கிற்கு வருபவர்களிடம், நுழைவு கட்டணமாக, ஐந்து ரூபாய் வசூலிக்கப்படும். அந்த
தொகை, முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு
வழங்கப்படும். நுழைவு சீட்டில் இடம் பெறும் கூப்பன்கள் குலுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும்
வாசகர்களுக்கு, குறிப்பிட்ட தொகைக்கு நுால்கள்
பரிசளிக்கப்படும்.
மாணவர்களுக்கு இலவசம்; பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையுடன் வரும் மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் கிடையாது. நிகழ்ச்சிகள்: புத்தக விற்பனை கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட அசோக் நகர் நுாலகத்திற்கு, 3,000 புத்தகங்களை, வரும், 16ம் தேதி, வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
