UPDATED : ஜன 12, 2016 12:00 AM
ADDED : ஜன 12, 2016 10:18 AM
வால்பாறை
:
இயற்கை அன்னை வரைந்த ஓவியமான, எழில்மிகு வால்பாறையில் அதிகாலை
நேரத்தில் நிலவும் பனிமூட்டமும், பகல் நேரத்தில் நிலவும் ஜில்லென்ற
காற்றும், இரவு நேரத்தில் நிலவும் கடுங்குளிரும்
நம் மனதை வருடுகிறது.
கொட்டிக்கிடக்கும்
அழகுமிகு வால்பாறையில், அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக
பணிபுரிந்து, வாக்காளர் பட்டியலில் அதிக
வாக்காளர்களை இணைத்து, கல்வி அறிவு இல்லாத பாமர மக்களையும்
அரவணைத்து அவர்களிடையே வாக்காளர் அடையாள அட்டை பெறுவதின் அவசியத்தை உணர்த்தியவர்
ஆசிரியர் இளங்கோ.
பெயருக்கு ஏற்றபடி மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருவதில் மட்டுமல்லாது, பொதுமக்களின் அன்றாட பிரச்னைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவராக திகழ்ந்து வருகிறார். இயற்கை அழகில் இறைவன் எத்தனையோ படைப்புக்கள் படைத்தாலும், வாழும் காலத்திலேயே வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதோடு, ஏழை எளிய மக்களுக்கு முடிந்த வரை உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டு வருகிறார் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ.
வாக்காளர்
பட்டியலில், சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக,
தேர்தல் ஆணையம் அவரை கவுரவிக்கும் வகையில்
கடந்த ஆண்டு விருது வழங்கியுள்ளது.
வாழ்நாள்
முழுவதும் சேவை செய்ய வேண்டும்
விருது பெற்ற
இளங்கோ நமது நிருபரிடம் கூறியதாவது:
எனது சொந்த ஊர் பெரம்பலுார். வால்பாறையிலேயே பிறந்து வளர்ந்து, இங்குள்ள பள்ளியில் படித்து, தற்போது செலாளிப்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்துவருகிறேன். கடந்த, 11 ஆண்டுகளாக இங்கு, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, தகுதி வாய்ந்த வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, தகுந்தஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன். எனது சேவையை பாராட்டி, தேர்தல் ஆணையத்தின் சார்பில் விருது கிடைத்துள்ளது பெருமையாக உள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய வேண்டும். ஏழை, எளிய மாணவர்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு இன்று வரை உதவி செய்து வருகிறேன். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது எந்த அளவுக்கு உண்மை என்பது, இது போன்ற சேவை செய்யும் போது தான் அறியமுடியும். அந்த அரிய வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி என்று இளங்கோ மன நெகிழ்ச்சியுடன் கூறினார். ஆசிரியரின் இந்த சேவையை நாமும் பாராட்டலாம்
