sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு மார்ச் இறுதிக்குள் இலவச ஷூ, சாக்ஸ்

பள்ளி மாணவர்களுக்கு மார்ச் இறுதிக்குள் இலவச ஷூ, சாக்ஸ்

பள்ளி மாணவர்களுக்கு மார்ச் இறுதிக்குள் இலவச ஷூ, சாக்ஸ்


UPDATED : ஜன 12, 2016 12:00 AM

ADDED : ஜன 12, 2016 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 12, 2016 12:00 AM ADDED : ஜன 12, 2016 10:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு
: முதல் வகுப்பிலிருந்து
, 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஷூ மற்றும் சாக்ஸ் வாங்க, கல்வி அபிவிருத்தி மற்றும் நிர்வகிப்பு கமிட்டிக்கு, மாநில அரசு பணம் வழங்கியுள்ளது. 

மாணவர்களுக்கு கறுப்பு நிற ஷூ, வெள்ளை நிற சாக்ஸ் வாங்கும்படி உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் இலவச ஷூ, சாக்ஸ் வழங்கப்படுகிறது. பள்ளி துவங்கி நான்கைந்து மாதங்களுக்கு பின்னரே, ஷூக்கள் தரப்படுகிறது என, மாணவர்களும், பெற்றோரும் புகார் கூறுவது வழக்கம். வரும் கல்வி ஆண்டு, இது போன்ற பிரச்னை ஏற்படக்கூடாது என்ற நோக்கில், மாணவர்களுக்கு ஷூக்கள், சாக்ஸ்கள் வாங்குவதற்கான தொகையை, பள்ளி அபிவிருத்தி மற்றும் நிர்வகிப்பு கமிட்டியிடம், அரசு வழங்கியுள்ளது.

மார்ச் இறுதிக்குள் தரமான ஷூக்கள், சாக்ஸ்கள் வாங்கி, மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா, 225 ரூபாயிலும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா, 250 ரூபாயிலும்,  ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, தலா, 275 ரூபாயிலும் ஷூக்கள் வாங்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு தரமான ஷூக்கள், சாக்ஸ்கள் வழங்கும் செயல்பாடுகளை, 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். ஷூக்களின் தரம், விலை உட்பட, அனைத்து விவரங்களை, அந்தந்த பகுதி கல்வித்துறை அதிகாரிகள், மார்ச், 31ம் தேதிக்குள், கல்வித்துறை கமிஷனரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us