தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரியில் பொங்கல் விழா

அரசு கல்லூரியில் பொங்கல் விழா

அரசு கல்லூரியில் பொங்கல் விழா


UPDATED : ஜன 13, 2016 12:00 AM

ADDED : ஜன 13, 2016 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2016 12:00 AM ADDED : ஜன 13, 2016 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கோவை அரசு கலைக் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் பிற துறை மாணவர்கள் சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. 

காலை, 10:00 மணி முதலே, மண் பானை, கரும்பு, பூளை பூ உள்ளிட்டவற்றை வைத்து பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் பொங்கல் வைத்தனர்.கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரமோத்குமார், நாட்டு நலப்பணி திட்ட(அலகு- 3) அலுவலர் மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 

இனிப்பு, கரும்பு, பொங்கல் ஆகியன அனைவருக்கும் வழங்கப்பட்டன. இறுதியில் ஜமாப் அடிக்க மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் அறையை மாணவர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us