தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் கண்டுபிடிப்புக்கு உதவித்தொகை!

அறிவியல் கண்டுபிடிப்புக்கு உதவித்தொகை!

அறிவியல் கண்டுபிடிப்புக்கு உதவித்தொகை!


UPDATED : ஜன 13, 2016 12:00 AM

ADDED : ஜன 13, 2016 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2016 12:00 AM ADDED : ஜன 13, 2016 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்
: தமிழகத்தில் பள்ளி மாணவ
, மாணவியரிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், 6,923 மாணவ, மாணவியருக்கு, உதவித்தொகையாக தலா, 5,000 ரூபாய் வீதம், நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், பள்ளி மாணவ, மாணவியரிடையே, அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு போட்டியிட விரும்பும் மாணவர்கள், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு, 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்த நிதியில், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு மாவட்ட, மாநில, தேசிய விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படுகிறது. 

நடப்பு கல்வியாண்டில், இதுவரை,7, 928 பேர், உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் முதல்கட்டமாக, 6, 923 மாணவியருக்கு, 5,000 ரூபாய் உதவித்தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத பள்ளிகளும், பிப்., 3ம் தேதி வரை, இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us