தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்த பிப்., 1ம் தேதி கடைசி

பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்த பிப்., 1ம் தேதி கடைசி

பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்த பிப்., 1ம் தேதி கடைசி


UPDATED : ஜன 18, 2016 12:00 AM

ADDED : ஜன 18, 2016 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2016 12:00 AM ADDED : ஜன 18, 2016 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: அவிநாசி ரோட்டிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ஏப்.
, மாதம் நடைபெறவுள்ள தேர்வுக்கான கட்டணங்களை அபராதமின்றி செலுத்த பிப்., 1ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும், பயின்ற முழுநேரம் மற்றும் பகுதிநேர மாணவர்களுக்கு ஏப்., மாதம் பட்டயத் தேர்வுகள் நடக்கிறது. இத்தேர்வு கட்டணமாக, ஒரு பாடத்துக்கு, 50 ரூபாய், மதிப்பெண் பட்டியல், 30 ரூபாய், பதிவு கட்டணம், 25 ரூபாய் செலுத்த வேண்டும். இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மட்டும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழுக்கு, 60 ரூபாய், தற்காலிக பட்டயச் சான்றிதழ், 75 ரூபாய் மற்றும் பட்டயச் சான்றிதழுக்கு, 150 ரூபாய் செலுத்த வேண்டும். அபராதமின்றி கட்டணம் செலுத்த பிப்., 1ம் தேதி கடைசி நாள். 100 ரூபாய் அபராதமுடன், 8ம் தேதி வரையும், 500 ரூபாய் அபராதமுடன், 22ம் தேதி வரையும் கட்டணம் செலுத்தலாம்.

அதற்குபிறகு செலுத்தப்படும் தேர்வு கட்டணம் எக்காரணம் கொண்டும் பெறப்படமாட்டாது என, கல்லுாரி முதல்வர் வைரம் தெரிவித்துள்ளார். ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவிலில் பொங்கல் விழாகுறிச்சி பிச்சனுாரிலுள்ள ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவிலில், பொங்கல் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் திரளாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

க.க.சாவடியை அடுத்து வேலந்தாவளம் செல்லும் வழியில், பிச்சனுாரில் ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, தை முதல் மற்றும் இரண்டாம் நாளில், சிறப்பு அபிஷேகம் நடக்கும். மாட்டுப்பொங்கல் அன்று மாலையிலிருந்து, மறுநாள் இரவு வரை, விவசாயிகள் தங்கள் வளர்ப்பு மாடுகளிலிருந்து, பால் கறந்து கொண்டு வந்து, சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்வர். இந்நிகழ்ச்சி இவ்வாண்டும், நேற்று முன்தினம் துவங்கியது.

மூன்றாம் நாளான நேற்று, பால் அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைக்கான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில், ஆடு, மாடு, கோழி, மனித உருவங்கள், உறுப்புகள் உள்ளிட்ட பொம்மைகளை படைத்து, விளக்கேற்றி, வழிபட்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தீர்த்தவாரியும், நாளை தரிசனமும் நடக்கிறது.

அதுபோல, போத்தனுாரை அடுத்த மேட்டூர், கணேசபுரத்திலுள்ள மூரண்டம்மன் கோவிலில், காணும் பொங்கல் முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us