தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/லேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு

லேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு

லேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு


UPDATED : ஜன 19, 2016 12:00 AM

ADDED : ஜன 19, 2016 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2016 12:00 AM ADDED : ஜன 19, 2016 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லேப்டாப் பெற்றுக் கொண்டவுடன், சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். ஆனால் பலருக்கு இது தெரிவதில்லை. இதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான லேப்டாப்கள், மாணவர்களின் வீடுகளில் முடங்கியுள்ளன. இதை ஆய்வு செய்த அரசு, எல்காட் நிறுவனம் மூலம் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிறுவன ஊழியர்கள் மாவட்டம் தோறும் சென்று, முதற் கட்டமாக இந்தாண்டு லேப்டாப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: 

ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலை பள்ளி, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகளில், லேப்டாப்களில் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யும் பணி இன்று துவங்குகிறது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் இப்பணி நடைபெறும். விடுபட்ட மாணவ, மாணவிகளும் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். 

பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியர் சொல்லும் நாட்களில் லேப்டாப்பை எடுத்து வர வேண்டும். வேறு பிரச்னைகள் இருந்தாலும் கூட நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us