UPDATED : ஜன 20, 2016 12:00 AM
ADDED : ஜன 20, 2016 10:58 AM
பொள்ளாச்சி
: பொள்ளாச்சி
திருவிழாவில், கல்லுாரி மாணவர்கள் பாரம்பரிய நடனங்களை
ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், பொள்ளாச்சி திருவிழா நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி முதல் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்று பி.ஏ., கல்லுாரி மாணவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் செல்வபாண்டி, பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி மற்றும் பி.ஏ., கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆச்சிப்பட்டி ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில், கல்லுாரி மாணவ, மாணவர்களின் பாரம்பரிய நடனங்களான தேவராட்டம், கிராமிய நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும்; களரி ஆட்டம், சிலம்பாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று....பொள்ளாச்சி- கோவை ரோட்டில், உள்ள சக்தி மில் மைதானத்தில், ஆச்சிப்பட்டி ஊராட்சி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
