தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்.எஸ்.எஸ்.,மாணவர்களுக்கு வரவேற்பு!

என்.எஸ்.எஸ்.,மாணவர்களுக்கு வரவேற்பு!

என்.எஸ்.எஸ்.,மாணவர்களுக்கு வரவேற்பு!


UPDATED : ஜன 20, 2016 12:00 AM

ADDED : ஜன 20, 2016 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2016 12:00 AM ADDED : ஜன 20, 2016 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
தேசிய இளைஞர் விழா வில் பங்கேற்று, புதுச்சேரி திரும்பிய, என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சத்தீஸ்கார் மாநிலம் ராய்பூரில் கடந்த 12ம் தேதி முதல் 16ம் தேதிவரை, தேசிய இளைஞர் விழா நடந்தது. இதில், புதுச்சேரி நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் தாகூர் கலைக் கல்லுாரி மாணவர் கள் ஜெரிமா, கிருபாகரன், செல்வகணபதி, சூர்யா, இந்திராகாந்தி கலைக்கல்லுாரி மாணவர் கண்ணன், விநாயகா மிஷன் செவிலியர் கல்லுாரி மாணவர்கள் பிரதாபன், சுனிதா, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய மாணவர் சித்ரா, சமுதாய கல்லுாரி மாணவர் மேரிஜெனிபர் பங்கேற்றனர்.

அங்கு நடந்த கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று திறமைகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தினர். புதுச்சேரி திரும்பிய மாணவர்களை, நாட்டு நலப்பணித்திட்ட மாநில அலுவலர் குழந்தைசாமி, திட்ட ஒருங்கிணைப்பா ளர் தேவபாலன் ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us