UPDATED : ஜன 21, 2016 12:00 AM
ADDED : ஜன 21, 2016 09:55 AM
விருதுநகர்
: முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல விளையாட்டு போட்டிகள் மதுரையில் பிப்.,
முதல் வாரத்தில் நடக்க உள்ளது.
இதில் தென் மாவட்ட பள்ளிகள் பங்கேற்கின்றன. விளையாட்டு துறை சார்பில், பள்ளி,கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும் தடகள, நீச்சல்,கூடை பந்து, கையுந்து பந்து, கால் பந்து,இறகு பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், போன்ற போட்டிகளில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பிடித்தவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை பிப்ரவரியில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் படி கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வீரர்கள் பங்கேற்கும் மண்டல விளையாட்டு போட்டிகள் மதுரையில் பிப்., முதல் வாரத்தில் நடக்க உள்ளன. இதில் வெற்றிபெறும் வீரர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.
