தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு கலை மீது ஆர்வம்!

மாணவர்களுக்கு கலை மீது ஆர்வம்!

மாணவர்களுக்கு கலை மீது ஆர்வம்!


UPDATED : ஜன 21, 2016 12:00 AM

ADDED : ஜன 21, 2016 09:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2016 12:00 AM ADDED : ஜன 21, 2016 09:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: சென்னை
, அடையாறில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலையில், நவீன சம்பிரதாயா என்ற தலைப்பிலான, முதல் தேசிய மாநாடு, நேற்று துவங்கியது.

மாநாட்டை, துணை வேந்தர் வீணை காயத்ரி, தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் சஜீத், கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர் பெருமாள் ஆகியோர் துவக்கி வைத்தனர். விழாவில், வீணை காயத்ரி பேசுகையில், முதல் தேசிய மாநாட்டை துவக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். மாநாடு மற்றும் கருத்தரங்கிற்காக, எங்களுடன் துணை நின்ற, தஞ்சாவூர், தென்னக பண்பாட்டு மையம் மற்றும் கலை பண்பாட்டு துறைக்கு நன்றிஎன்றார்.

துவக்க விழாவை தொடர்ந்து, ஆனந்த் கிருஷ்ணன், சுந்தர் குமார், கரண் சஜ்னானி, ஷீலா உன்னி கிருஷ்ணன், ஸ்ரீதேவி நிர்த்யாலயா, சுரேஷ், பிரதீப் குமார், ஹரி பாகவதர் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடந்தன. இப்பல்கலைக் கழகத்தின் கீழ், சென்னை, கோவை, திருவையாறு, மதுரை ஆகிய இடங்களில் உள்ள, நான்கு இசைக் கல்லுாரிகள் உள்ளன. கவின்கலை, சிற்பக் கல்லுாரி என, எட்டு கல்லுாரிகள் உள்ளன. இங்கு, பட்ட மேற்படிப்பு மற்றும், டிப்ளமோ படிப்புகளில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பெருமாள், கலை, பண்பாட்டு துறை இணை இயக்குனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us