ஆதார் எண்ணை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
ஆதார் எண்ணை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
UPDATED : ஜன 21, 2016 12:00 AM
ADDED : ஜன 21, 2016 10:01 AM
அ நிறம் | அளவு
கூடலுார்
: தேசிய மக்கள் தொகை பதிவேட்டில்,
ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
வழங்கப்பட்டது.
கூடலுார், வருவாய் துறை அலுவலர் சங்க கட்டடத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், ஆதார் எண், மொபைல்போன் எண், ரேஷன் கார்டு எண் ஆகியவற்றை இணைப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
கூடலுார் தாசில்தார் அப்துல்ரகுமான் தலைமை வகித்து, செயல் விளக்க பயிற்சி அளித்தார். முகாமில், தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் கனிசுந்தரம், சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலசுப்ரமணி, கமல், சுவதா, பாலசந்திரன், மோசஸ், ஜாபர், பார்வதி, நுார்ஜகான் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
