UPDATED : ஜன 21, 2016 12:00 AM
ADDED : ஜன 21, 2016 10:02 AM
அ நிறம் | அளவு
கோபிசெட்டிபாளையம்:
ஈரோடு
தாலுகாவில், 49 மையங்களிலும், பவானியில், 21 மையங்களிலும், கோபியில், 25 மையங்களிலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், ஒருங்கிணைந்த குடிமைப்பணிக்கான தேர்வு (தொகுதி 2ஏ) ஜன., 24ல் நடக்கிறது.
கோபி தாலுகாவில் உள்ள, 13 இடங்களில், 25 மையங்களில் மொத்தம், 7,518 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். காலை, 10 முதல் மதியம், 1 மணி வரை நடக்கும். தேர்வு துவங்கியது முதல் முடியும் வரை, வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில், கோபி தாசில்தார் ஆறுமுகம், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
