UPDATED : மார் 14, 2016 12:00 AM
ADDED : மார் 14, 2016 10:39 AM
ராமநாதபுரம்
: தேசிய
போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கான சீனியர் ஹாக்கி போட்டி
ராமநாதபுரத்தில் துவங்கியது.
உத்திரப்பிரதேசத்தில் ஏப்., முதல் வாரத்தில் தேசிய ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ராமநாதபுரம் ஹாக்கி சங்கம் தேர்வு செய்கிறது. இதற்கான மாநில 6வது சீனியர் ஹாக்கி போட்டி ராமநாதபுரத்தில் நேற்று துவங்கியது.
லீக், நாக் அவுட் முறையில் நடக்கும் போட்டியில் 25 மாவட்ட அணிகள் பங்கேற்றன. நேற்றைய முதல் லீக் போட்டியில் 5:0 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம், கன்னியாகுமரி அணியை வென்றது. 7:1 என்ற கோல் கணக்கில் தர்மபுரி, திருவாரூரையும், 9:0 என்ற கோல் கணக்கில் திருச்சி, திருவண்ணாமலையையும், 1:0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் சேலத்தையும், பெரம்பலுார் அணி வராததால் திண்டுக்கல் அணியும் வென்றன. மார்ச் 16ல் லீக் போட்டிகள், மார்ச் 17 முதல் 19 வரை காலிறுதி, அரையிறுதி போட்டி நடக்கின்றன. மார்ச் 20ல் இறுதிப்போட்டி நடக்கிறது.
