UPDATED : மார் 15, 2016 12:00 AM
ADDED : மார் 15, 2016 10:56 AM
சென்னை
: பிளஸ் 2 தேர்வில், 34 பேர் முறைகேடு புகாரில்
சிக்கியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், வேதியியல் மற்றும் கணித பதிவியல் பாடங்களுக்கு, நேற்று தேர்வு நடந்தது. வேதியியல் பாடம் மிக சிக்கலாகவும், கணித பதிவியல் தேர்வு எளிமையாகவும் இருந்தது. தமிழகம் முழுவதும், 16 பேர், வேதியியலிலும்; 18 பேர், கணித பதிவியல் பாடத்திலும் முறைகேடு புகாரில் பிடிபட்டனர். அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், ஒரு பள்ளி மாணவரும், 16 தனித்தேர்வர்களும் பிடிபட்டனர்.
இது தவிர, ஈரோட்டில் நான்கு, நாமக்கல், வேலுார் மற்றும் சேலம் ஆகியவற்றில் தலா, ஒன்று என, ஏழு பள்ளி மாணவர்களும்; அரியலுார், விழுப்புரம் ஆகியவற்றில், தலா ஒன்று, திருவண்ணாமலை, கடலுாரில் தலா, 2 மற்றும் சேலத்தில், நான்கு தனித்தேர்வர்கள் என, 10 தனித்தேர்வர்கள் பிடிபட்டதாக, தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
