UPDATED : மார் 19, 2016 12:00 AM
ADDED : மார் 19, 2016 11:05 AM
பொள்ளாச்சி பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையமாக எல்.எம்.எஸ்., பள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி மாவட்டத்தில், கடந்த 4ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும்; கடந்த 15ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடந்து வருகின்றன. இதில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் பழனிக்கவுண்டர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் திருத்தும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களும் திருத்தும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.
இதற்காக அந்த கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில், மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், இக்கல்வி மாவட்டத்தில், பல்லடம் ரோட்டில் உள்ள புனித லுார்து அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (எல்.எம்.எஸ்.,) விடைத்தாள் திருத்தும் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது, என்றனர்.
