பிளஸ் 2 தேர்வை கண்காணித்த வெளி மாவட்ட பறக்கும் படை
பிளஸ் 2 தேர்வை கண்காணித்த வெளி மாவட்ட பறக்கும் படை
UPDATED : மார் 19, 2016 12:00 AM
ADDED : மார் 19, 2016 11:07 AM
அ நிறம் | அளவு
மதுரை
:
மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முதன் முறையாக வெளி மாவட்ட
பறக்கும் படை ஆசிரியர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரையில் பொதுத் தேர்வை கண்காணிக்க அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குனர் சசிகலா நியமிக்கப்பட்டார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். இதனால், திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் சீனியர் ஆசிரியர்கள் கொண்ட பறக்கும் படை (ஜெ.டி., ஸ்குவாடு) மதுரையில் பல்வேறு தேர்வு மையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், இணை இயக்குனரின் பறக்கும் படை இதுபோன்று மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று கண்காணிக்கலாம். மதுரையில் வெளிமாவட்ட பறக்கும்படை குழு சோதனை மேற்கொண்டது முதல்முறை, என்றார்.
