கவிதை எழுதுவது குற்றச் செயலா? கேட்கிறார் கவிஞர் புவியரசு
கவிதை எழுதுவது குற்றச் செயலா? கேட்கிறார் கவிஞர் புவியரசு
UPDATED : மார் 21, 2016 12:00 AM
ADDED : மார் 21, 2016 11:05 AM
கோவை
: கவிதை எழுதுவது ஒரு குற்றச்செயல் போல் பார்க்கப்படுகிறது என, கவிஞர் புவியரசு பேசினார்.
கோவையில் கவிஞர் சிவவிஜயபாரதி எழுதிய வெள்ளக்காக்கா மல்லாக்கப் பறக்குது&' என்ற கவிதை நுால் வெளியீட்டு விழா அண்ணாமலை அரங்கில் நேற்று நடந்தது. கவிஞர் அரிகரசுதன் தலைமை வகித்தார். இனியன் நேருதாசு வரவேற்றார். நுாலை குளத்துார் மணி வெளியிட கோவிந்தம்மாள் பெற்றுக்கொண்டார்.
கவிதை
நுால் குறித்து மதிப்புரை வழங்கிய கவிஞர் புவியரசு பேசியதாவது:
கவிதை எழுதுவது ஒரு குற்றச்செயல் போல் பார்க்கப்படுகிறது. கவிஞர்களை அரசு அதிகார பீடங்கள் கண்காணிக்கின்றன. இதை நான் சொல்லக்காரணம், அவர்களின் கண்காணிப்பு வட்டத்துக்குள் நானும் இருக்கிறேன். கவிஞர்கள் தங்கள் உணர்வுகளை சுதந்திரமாக கவிதைகளில் வெளிப்படுத்த முடியாத நிலை இன்றைக்கு உள்ளது.
கவிஞர் சிவவிஜயபாரதி கவிதையில் வாழ்க்கையின் அழுத்தமும், ஈரமும் இருக்கிறது. பூவரச மரத்தடியில் மழைக்கு ஒதுங்கிய அனைவரது முகங்களிலும், ஒரே மாதிரியாக பெய்யும் மழையில் நனைவது போல, இக்கவிதைகள் பரவசத்தை தருகின்றன. இவரது கவிதைகளால் தமிழ் செழுமை அடையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இவ்வாறு, புவியரசு பேசினார்.
