தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி

பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி

பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி


UPDATED : மார் 22, 2016 12:00 AM

ADDED : மார் 22, 2016 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2016 12:00 AM ADDED : மார் 22, 2016 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: புதுச்சேரி ஆர்ட் கேலரியில் ஸ்பெக்ட்ரம் குழு ஓவியக் கண்காட்சி நேற்று துவங்கியது.

புதுச்சேரி நீடராஜப்பய்யர் வீதியில் உள்ள செகா ஆர்ட் கேலரியில் ஸ்பெக்ட்ரம் குழு ஓவியக் கண்காட்சி நேற்று துவங்கியது. விழாவிற்கு ஓவியர் அருள்சாமி தலைமை தாங்கினார்.

புதுச்சேரி ஓவிய நுண்கலைக் குழுத்தலைவர் மாலதி ராஜவேலு கண்காட்சியை துவக்கி வைத் தார். கலைமாமணி ஓவியர்கள் சுரேஷ், அன்பழகன், கந்தப்பன், சுகுமாறன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். செகா ஆர்ட் கேலரி நிர்வாகி வளையாபதி சன்றிதழ்களை வழங்கினார். ஓவியர் சரவணக்குமாரின் 15 வயதுக்கு உட்பட்ட 9 மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. 

இக்கண்காட்சி வரும் 24ம் தேதி வரையில் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆர்ட்லேண்ட் மையச் செயலாளர் ஆதிரை சரவணக்குமார், வேல்முருகன், லட்சியமதியழகி, நந்தகுமார் ஆகியோர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us