புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் லேசர் தொழில்நுட்ப கருத்தரங்கம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் லேசர் தொழில்நுட்ப கருத்தரங்கம்
UPDATED : மார் 23, 2016 12:00 AM
ADDED : மார் 23, 2016 11:08 AM
புதுச்சேரி
: புதுச்சேரி
பல்கலைக்கழக இயற்பியல் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, திறமையான அறிவியல் அறிஞர்களை
உருவாக்கும் நோக்கில், லேசர் மற்றும் தொகையற்ற ஒளியியல் என்ற
தலைப்பிலான 20 நாள் பயிற்சி முகாம் நேற்று
துவங்கியது.
இயற்பியல் துறை தலைவர் ராமசாமி முருகன் வரவேற்றார். மருத்துவம், தகவல் தொடர்பு, தொழிற்சாலைகள், கல்வி, பாதுகாப்பு துறைக்கு லேசரின் பயன்பாடுகள் குறித்து விளக்கப்படுகிறது. பயிற்சி முகாமை பல்கலைக்கழக துணை வேந்தர் அனிஷா பஷீர்கான் துவக்கி வைத்தார். பேராசிரியர் கோவிந்தராஜ் வாழ்த்தி பேசினார்.தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய இயக்குநர் பொற்செழியன் நோக்கவுரையாற்றினார்.
இந்துார் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் உதவி இயக்குநர் குப்தா சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில், தேசிய அளவில் 60 ஆராய்ச்சி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். உதவி பேராசிரியர் சிவபிரகாசம் நன்றி கூறினார்.
