UPDATED : மார் 23, 2016 12:00 AM
ADDED : மார் 23, 2016 11:09 AM
புதுச்சேரி
: துார்தர்ஷன்
தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகும் தொலைப்பாலம் நிகழ்ச்சியில், மாணவர்களின் தேர்வு திறன் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
துார்தர்ஷன்
நிகழ்ச்சி அமைப்பாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி துார்தர்ஷன் தொலைக்காட்சியில், இன்று (23ம் தேதி) மாலை 5:15 மணிக்கு, நேயர்கள் தொலைபேசி வழியாக உரையாடி விளக்கம் பெறும் தொலைப்பாலம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில், மாணவர்களின் தேர்வு திறன் மேம்பாடு என்ற தலைப்பில், மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்வது, கேள்விகளை தேர்ந்தெடுப்பது, பதில் எழுதுவது, திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல், வளர்ச்சிக்காக தங்களை தயார்படுத்திக்கொள்ளுதல்.
மேற்படிப்பு ஆலோசனைகள் குறித்து விளக்கம் பெறலாம்.புதுச்சேரி கல்வியாளர் தாஸ் விளக்கம் அளிக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்ப விரும்பும் நேயர்கள் 0413-2272487, 2272488 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
