வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா
UPDATED : மார் 23, 2016 12:00 AM
ADDED : மார் 23, 2016 11:10 AM
உடுமலை
: உடுமலை
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது.
கணிதத்துறை பேராசிரியர் நித்யகலா வரவேற்றார். செயலாளர் சத்யநாதன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஜெகநாதன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் சண்முகராஜா நடப்பாண்டுக்கான ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையின் பல்கலைக்கழக பேராசிரியர் ரஜினிக்குமார் பேசுகையில், மாணவர்கள் விளையாட்டின் மூலம் உடல் வலிமை பெறுவதோடு மன உறுதியையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
விளையாட்டில் ஈடுபடுவதால் பல்வேறு நற்பண்புகளையும் பெறுகின்றனர். குறிப்பாக விளையாட்டில் ஈடுபடும் பெண்கள், ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகாமல் உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும், என்றார். விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 97 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை இரண்டாமாண்டு மாணவர்களும், மாணவியருக்கான அன்னபூரணியம்மாள் சுழற்கோப்பையை, 94 புள்ளிகள் பெற்று மூன்றாமாண்டு மாணவியரும் தட்டி சென்றனர்.
பாரதியார் பல்கலைக்கழக ஹாக்கி அணியில் இடம் பெற்ற மாணவர்கள் அரவிந்தன், கருவண்டன், ஸ்லம் சாக்கர் உலகக் கோப்பையில் விளையாடிய மாணவன் மணிக்குமார் உள்ளிட்டோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் செல்லதுரை நன்றி கூறினார்.
