UPDATED : மார் 23, 2016 12:00 AM
ADDED : மார் 23, 2016 11:23 AM
அ நிறம் | அளவு
தேனி
: மாவட்டத்தில்
நேற்று நடந்த 10ம் வகுப்பு ஆங்கில முதல் தாள் தேர்வில்
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 347 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 30, உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 27 என மொத்தம் 57 மையங்களில் நடந்த இத்தேர்வில் 17,401 மாணவர்களில் 17,133 பேர் எழுதினர். 268 பேர் ஆப்சென்ட் ஆகினர். 695 தனித்தேர்வர்களில் 616 பேர் தேர்வெழுதினர். 79 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
மொத்தம் 347 பேர் ஆப்சென்ட் ஆகினர். முதன்மை கல்வி அலுவலர் வாசு தலைமையில் பறக்கும்படை அதிகாரிகள் தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
