UPDATED : மார் 23, 2016 12:00 AM
ADDED : மார் 23, 2016 11:21 AM
ஓமலூர்
: சேலம்
பெரியார் பல்கலை, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்
துறை சார்பில், நான்கு நாட்கள் பயிற்சி பட்டறை
துவங்கியது.
ஊடகத்துறையில், தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கேற்ப தங்களை எவ்வாறு தயார்படுத்துவது குறித்து பயிற்சி முகாம் நடக்கிறது. நிக்கான் கேமரா நிறுவனத்திலிருந்து வந்த நிபுணர்கள் மூலம் டி.எஸ்.எல்.ஆர்.,கேமரா கையாளும் விதம், தொழில்நுட்பம், அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டது.
நேற்று இதழியல் துறை மாணவ, மாணவியருக்கு ஆவண படம், குறும்படம் எவ்வாறு தயாரிக்க வேண்டும், காட்சியை பதிவு செய்வது, கருத்தை தெளிவுபடுத்தல் குறித்த பயிற்சியை ஆவண படம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆன்டரோ பயிற்சி வழங்கினார்.
இன்றைய இதழியல் போக்கு என்ற தலைப்பிலும், திரைப்படம் தயாரிப்பு குறித்த விளக்கங்களும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இதழியல் துறை மாணவ, மாணவியரின் திறன்கள் மேம்படும் என்று இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை தலைவர் நடராஜன் கூறினார்.
