தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2,000 கல்லூரிகளில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி!

2,000 கல்லூரிகளில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி!

2,000 கல்லூரிகளில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி!


UPDATED : மார் 24, 2016 12:00 AM

ADDED : மார் 24, 2016 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 24, 2016 12:00 AM ADDED : மார் 24, 2016 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார்
:
 நாடு முழுவதும், 2,000 கல்லுாரிகளில், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

தென் மாநிலங்களில் வளர்ச்சிகாஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், தனியார் கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை, நேற்று பார்வையிட்ட, தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தென் மாநிலங்களின் கிராமப்புறங்களில், கட்டுமானம், ஆட்டோமொபைல், ஆயத்த ஆடை மற்றும் சிறு வணிகம் போன்ற துறைகள், நல்ல வளர்ச்சியடைந்து உள்ளன.

கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு குறித்து, நல்ல முறையில் பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர, மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும், 2,000 கல்லுாரிகளில், 500 தொழில் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் மூலம், இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு குறித்து, பயிற்சி தர உள்ளோம்.

இதற்காக, மத்திய அரசு, ஒரு இளைஞருக்கு, 10 ஆயிரம் ரூபாய், ஊக்கத்தொகையாக வழங்குகிறது. தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து தேவைகளையும், மத்திய அரசு பூர்த்தி செய்யும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us