தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்

பேராசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்

பேராசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்


UPDATED : மார் 25, 2016 12:00 AM

ADDED : மார் 25, 2016 11:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2016 12:00 AM ADDED : மார் 25, 2016 11:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பல்கலை சட்டப்படிப்பு பிரிவு பேராசிரியரின் அறையில் புகுந்து மாணவர்கள் தாக்கியதில், அவரது மூக்கு உடைந்தது. தாக்கிய மாணவர்கள் மீது போலீசில், பல்கலை நிர்வாகம் புகார் அளித்து உள்ளது.

வாக்குவாதம்: சென்னை பல்கலையில், எம்.எல்., படிப்புக்கான சட்ட பாடப்பிரிவு செயல்படுகிறது. இங்கு, 30 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டாம் ஆண்டு படிக்கும் ரஞ்சித் என்ற மாணவர், நேற்று முன் தினம், துறைத் தலைவர் பேராசிரியர் டேவிட் அம்ப்ரோசை சந்தித்து, தன் தேர்வு மதிப்பெண் தொடர்பாக, விடைத்தாளை கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னையானது. நேற்று காலை, அரசியல் அறிவியல் பிரிவு சார்பில், திருக்குறள் குறித்த கருத்தரங்கு, பல்கலை வளாகத்தில் நடந்தது.

அதில் பங்கேற்க, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் வந்தார். அப்போது, அரசியல் அறிவியல் பிரிவு மற்றும் சட்டப்பிரிவு மாணவர் சிலர், நுழைவாயிலில் அமர்ந்து, போராட்டம் நடத்தினர். போலீசார், அவர்களை விலக்க முடியாததால், கிடைத்த இடைவெளியில் புகுந்த, தருண் விஜய் பல்கலைக்குள் நுழைந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், மாணவர்கள் மீண்டும், பேராசிரியர் அம்ப்ரோசுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.

ரத்தம் கொட்டியது: அப்போது, இரண்டு மாணவர்கள், பேராசிரியர் அம்ப்ரோசின் அலுவலக அறைக்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில், நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டு, பேராசிரியர் அறையின் மேஜை கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில், பேராசிரியருக்கு மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் தாக்குதல் நடக்காமல், பேராசிரியர் வேணுகோபால் மாணவர்களை தடுத்து, வெளியேற்றியுள்ளார்.

ரத்த காயத்துடன் மயங்கி விழுந்த அம்ப்ரோசுக்கு, பல்கலை டாக்டர் முதலுதவி அளித்தார். அதன் பின், அவரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

வழக்கு பதிவு: இதுகுறித்து, பேராசிரியர் அம்ப்ரோசிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அண்ணா சதுக்கம் போலீசில் வழக்கு பதிவானது. பல்கலை பதிவாளருக்கும், மாணவர்கள் மீது புகார் வந்துள்ளது. புகாரை, மாணவர் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியின் விசாரணைக்கு, பதிவாளர் டேவிட் ஜவஹர் பரிந்துரைத்துள்ளார்.

இன்று அரசு விடுமுறை என்பதால், அடுத்த வேலை நாளான, திங்கள் கிழமை விசாரணை நடக்க உள்ளது. புகாருக்கு உள்ளான மாணவர் ஜீவா மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோரை, ’சஸ்பெண்ட்’ செய்ய பல்கலை நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து, போலீசார் கூறும்போது, ‘புகாருக்கு உள்ளான சில மாணவர்கள் மீது ஏற்கனவே, வழக்குகள் நிலுவையில் உள்ளன. ’சில மாணவர்கள் வகுப்புக்கே வராமல், கூட்டம் போடுவதற்கு மட்டும், பல்கலை வளாகத்தை பயன்படுத்துகின்றனர். அவர்கள் குறித்த பட்டியல் தயார் செய்துள்ளோம்’ என்றனர்.

போராட்டம் அறிவிப்பு: இந்த பிரச்னை தொடர்பாக, சென்னை பல்கலை பேராசிரியர்கள் சங்கம் மற்றும் பணியாளர் சங்கத்தினர், திங்கள் கிழமை, பாதுகாப்பு கோரி, வாயில் முழுக்க போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். மாணவர்களை கைது செய்வதுடன், தொடர்ந்து பிரச்னைக்குரியவர்களாக இருக்கும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us