தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொலிவாகும் வகுப்பறைகள் மாணவர்களுக்கு புத்துணர்வு

பொலிவாகும் வகுப்பறைகள் மாணவர்களுக்கு புத்துணர்வு

பொலிவாகும் வகுப்பறைகள் மாணவர்களுக்கு புத்துணர்வு


UPDATED : மார் 29, 2016 12:00 AM

ADDED : மார் 29, 2016 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2016 12:00 AM ADDED : மார் 29, 2016 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்
: குன்னுார் சின்ன வண்டிசோலை பள்ளி வகுப்பறைகளில்
, மாணவர்களுக்கு விழிப்புண்ர்வை ஏற்படுத்தும் வகையிலான, பணிகள் நடந்து வருகின்றன.

குன்னுார் கன்டோன்மென்ட் நிர்வாகத்துக்கு உட்பட்ட சின்ன வண்டிசோலை பள்ளியில், 300 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுக்கு முன்பு இங்கு புதியதாக வகுப்பறைகள் கட்டப்பட்டன. மேலும், இந்த பள்ளியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதில், துாய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ், பள்ளி வளாகத்தை துாய்மையாக வைக்க பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. 

இதற்கான விழிப்புணர்வும் மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, பள்ளியில் காலியாக உள்ள சுவர்களில், தத்ரூப போட்டோக்களை வரைய கன்டோன்மென்ட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் முக்கிய தலைவர்கள்; தேசிய விலங்கு; மாநில விலங்கு; இயற்கை காட்சிகள் ஆகியவை வரைப்பட்டுள்ளன.

பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா கூறுகையில், பள்ளி சுவற்றில் வரையப்பட்டுள்ள தத்ரூபமான போட்டோக்களால், மாணவ, மாணவியர் மத்தியில் புத்துணர்வு ஏற்படும். மேலும், நம் பள்ளியை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us