UPDATED : மார் 29, 2016 12:00 AM
ADDED : மார் 29, 2016 11:10 AM
அ நிறம் | அளவு
சேலம்
:
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் பிட்
அடித்தது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட, 11 மாணவர்கள் பிடிபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு, 99 மையங்களில் நடைபெறுகிறது. அதில், நேற்று தாவரவியல், உயிரியல் மற்றும் வரலாறு தேர்வு நடந்தது. சேலம் தனியார் பள்ளி தேர்வு மையத்தில், விடைத்தாளில் எழுதி, முழுவதும் காப்பி அடித்த, இரு மாணவர்கள் பிடிபட்டனர்.
பிட் வைத்து எழுதியதாக, வாழப்பாடி தனியார் மேல்நிலைப்பள்ளி மையம் உள்ளிட்ட, ஐந்து மையங்களில், ஒன்பது பேர் பிடிபட்டனர். இதில், ஒருவர் தாவரவியல் பாடத்திலும், பத்து பேர் உயிரியல் பாடத்திலும் தேர்வெழுதினர். சேலம் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில், 11 பேர் பிடிபட்டுள்ளனர்.
