UPDATED : மார் 29, 2016 12:00 AM
ADDED : மார் 29, 2016 11:36 AM
திருப்பூர்
: வணிக கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வு கடினமாக இருந்தன; வரலாறு மற்றும் தாவரவியல் தேர்வு எளிதாக இருந்தது என, பிளஸ் 2 தேர்வெழுதிய
மாணவ, மாணவியர் கூறினர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று வணிக கணிதம், உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு பாடங்களுக்கான தேர்வு நடந்தது. மாணவ, மாணவியர் கூறுகையில், வரலாறு மற்றும் தாவரவியல் வினாத்தாள் எளிதாக இருந்தன; பலமுறை பயிற்சி செய்த வினாக்களும், கடந்த பொது தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களும் அதிகமாக வந்திருந்தன.
வணிக கணிதம் மற்றும் உயிரியல் தேர்வு, விலங்கியல் பாடப்பகுதி வினாக்கள், கடினமாக இருந்தன; கடந்த தேர்வில் கேட்காத புதிய வினாக்கள் அதிகமாக வந்திருந்தன; பயிற்சி வினாக்களில் இருந்து நேரடியாக கேட்காமல், பாடப்பகுதியில் இருந்து, புதிய வினாக்களை உருவாக்கி கேட்கப்பட்டிருந்ததால், சரியாக பதில் எழுத முடியவில்லை. எதிர்பார்த்தபடி, வணிக கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வு அமையவில்லை என்றனர்.
