தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலை தேர்வுக்கு ’ஆன்லைன்’ விண்ணப்ப முறை

பாரதியார் பல்கலை தேர்வுக்கு ’ஆன்லைன்’ விண்ணப்ப முறை

பாரதியார் பல்கலை தேர்வுக்கு ’ஆன்லைன்’ விண்ணப்ப முறை


UPDATED : மார் 29, 2016 12:00 AM

ADDED : மார் 29, 2016 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2016 12:00 AM ADDED : மார் 29, 2016 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலையின் தொலைமுறை கல்விக்கூடம், ஆன்லைன் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறையை இவ்வாண்டு அறிமுகம் செய்துள்ளது. 

இதற்கு, மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.பாரதியார் பல்கலையின் தொலைமுறைக் கல்வி கூடத்தில்,  இளங்கலை, முதுகலை,  எம்.பி.ஏ., பாடப்பிரிவுகள், முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் மற்றும் எம்.சி.ஏ., பி.எட்., எம்.எட்., படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பயின்று வருகின்றனர்.

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள, 390 கல்வி மையங்களில், 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இம்முறையில் தேர்வெழுதும் மாணவர்கள் கடந்தாண்டு வரை, மேனுவல்ஆக தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். 

இந்நிலையில், மாணவர்கள் அலைச்சலை போக்கும் விதமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, வரும் மே மாதம் நடக்கவுள்ள தேர்வுக்கு, http://sde.bu.ac.in என்ற பல்கலை இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் அதிலுள்ள குறிப்புகளின்படி விண்ணப்பித்துக்கொள்ளலாம். 

இது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொலைமுறை கல்விக்கூட இயக்குனர் தாமஸ் கூறுகையில்,தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை மாணவர்களிடம் நல் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், தாள் பயன்பாடு குறைவதுடன், அலைச்சலும், நேரமும் மிச்சம். தேசம் முழுவதுமுள்ள மாணவர்கள் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் தேர்வு கட்டணத்தை செலுத்தி, ரசீது உள்ளிட்ட விபரங்களை பதிவுசெய்து 

விண்ணப்பிக்கலாம். எதிர்காலத்தில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us