தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்னொரு அண்ணாமலை பல்கலையாக மாறும் கல்வி பேரவை!

இன்னொரு அண்ணாமலை பல்கலையாக மாறும் கல்வி பேரவை!

இன்னொரு அண்ணாமலை பல்கலையாக மாறும் கல்வி பேரவை!


UPDATED : மார் 29, 2016 12:00 AM

ADDED : மார் 29, 2016 12:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2016 12:00 AM ADDED : மார் 29, 2016 12:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை காமராஜ் பல்கலையில் நிதி ஆதாரங்களை பெருக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னுமொரு அண்ணாமலை பல்கலையாக மாறிவிடும் ஆபத்து ஏற்படும், என கல்வி பேரவை கூட்டத்தில் உறுப்பினர்கள் எச்சரித்தனர்.

கன்வீனர் கமிட்டி உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பதிவாளர் (பொறுப்பு) முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

உறுப்பினர்கள் பேசியதாவது:

சின்னையா
: பொன்விழாவை பல்கலை கொண்டாடவுள்ளது. மத்திய அரசு பல்கலைகளில் உள்ளது போல் துணைவேந்தர் பணியிடம் காலியாகும் நேரத்தில்
சீனியர் பேராசிரியர் துணைவேந்தர் பொறுப்பு ஏற்க, மாநில பல்கலைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். கன்வீனர் கமிட்டியில் ஒன்றுக்கு மேல் உறுப்பினர்கள் இருப்பதால் நிர்வாக பணிகளில் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

வெங்கட்ராமன்
: பல்கலை சட்டவிதிகளை தான் பின்பற்ற முடியும். பணிகள் பாதிக்கவில்லை. எந்த துறைகளிலும்
பைல்கள் தேங்கவில்லை.

நேரு
: இரண்டு ஆண்டுகளாக
கைடுஷிப் அனுமதி கேட்டு பேராசிரியர்கள் காத்திருக்கின்றனர். ஆராய்ச்சி மாணவர்கள் பாதித்துள்ளனர்.

தற்போது கைடுஷிப் பிற்கு அனுமதி வழங்கப்படுகிறது. முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன்: பொன்விழா நினைவு துாண் நிறுவ வேண்டும். நிறைவு விழாவிற்கு ஜனாதிபதி, பிரதமரை அழைக்க வேண்டும்.பல்கலை நிதி ஆதாரம் கவலையளிப்பதாக உள்ளது. பெறப்படும் நிதியும் முறையாக செலவிடுவதில்லை.

இந்தாண்டு நிதி கிடைத்தும் எந்த துறைக்கும் இதுவரை செல்லவில்லை. புதிய பாடத்திட்டம், வேலைவாய்ப்பு தரும் படிப்புகளை அறிமுகம் செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். முறையாக நிதி செலவிடுவதில் சிலர் கைகள் கட்டப்பட்டுள்ளன. இன்னுமொரு அண்ணாமலை பல்கலையாக இது மாறிவிடுமோ என கவலை உள்ளது.

வெங்கட்ராமன்
: கல்லுாரிகளுக்கு அனுமதி
, பாடத்திட்ட அனுமதி தொடர்பாக ரூ.1.50 கோடி நிலுவையில் உள்ளது. நிதி ஆதாரத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆறுமுகம்
: பி.எஸ்சி.
, (சாப்ட்வேர்) என்ற படிப்பை பி.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதேபோல் எம்.எஸ்சி.,யிலும் மாற்ற வேண்டும். சாப்ட்வேர், சி.எஸ்.,அன்ட் ஐ.டி.,பிரிவு படித்து முடிப்போர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு இணையான சான்று பெற வேண்டியுள்ளது. மாணவர்கள் பாதிக்கின்றனர்.

நேரு
: பாடத் திட்டங்களிலும் மாற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் தேர்வு ரத்து
: 

தொலைநிலைக் கல்வியில் உள்ள ஆன்லைன் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சிண்டிகேட் உறுப்பினர் ராஜராஜன், தேர்வாணையர் விஜயன், தொலைநிலைக் கல்வி கூடுதல் தேர்வாணையர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கேள்விக்கு என்ன பதில்:

உறுப்பினர் நேரு பேசுகையில், தொலைநிலைக் கல்வியில் எம்.பில்., தேர்வில், தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 680 பேர் தோல்வியுற்றனர். அனைவரும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றனர். இது சாத்தியமா. இதில் ஊழல் நடந்துள்ளதா என விசாரிக்க வேண்டும், என்றார்.

உறுப்பினர் ஆறுமுகம், சிண்டிகேட் உறுப்பினர்களின் தவறான கொள்கை முடிவால் பல்கலை நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. துணைவேந்தர்கள் சுயநலனுக்காக செயல்படுகின்றனர். இது தவிர்க்க வேண்டும், என்றார். இக்கேள்விகளுக்கு கூட்டத்தில் பதில் அளிக்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us