தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/32 நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு

32 நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு

32 நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு


UPDATED : மார் 29, 2016 12:00 AM

ADDED : மார் 29, 2016 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2016 12:00 AM ADDED : மார் 29, 2016 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: அங்கீகாரம் புதுப்பிக்காத மற்றும் போதிய கட்டமைப்பு வசதி 
இல்லாத, 32 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, நோட்டீஸ் வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், 228 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்படுகின்றன. போதிய இட வசதி, வகுப்பறை, விளையாட்டு மைதானம், தீயணைப்பு கருவிகள் இருந்தால் மட்டுமே, பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. போதிய வசதி செய்யாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை.

அதன்படி, அங்கீகாரம் புதுப்பிக்காத மற்றும் போதிய வசதி செய்யாத, 32 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு, கடந்த மாதம் முதல்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டது. இரண்டாவது நோட்டீஸ், ஓரிரு நாட்களில் வழங்கப்பட உள்ளது; மூன்றாவது நோட்டீஸ் ஏப்., மாதம் வழங்கப்படும்.

கல்வித்துறையினர் கூறுகையில், போதிய இடவசதி, கட்டட உறுதி சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு துறை சான்று பெறாத பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படுவதில்லை. இத்தகைய குறைபாடுள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்கி, அவகாசம் அளித்து எச்சரிக்கை செய்யப்படும். 

மூன்று முறை நோட்டீஸ் வழங்கிய பிறகும், எவ்வித அடிப்படை வசதியும் செய்துகொள்ளாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடுவதற்கு, கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us