தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலையில் பல கோடி கட்டண மோசடி!

மதுரை காமராஜ் பல்கலையில் பல கோடி கட்டண மோசடி!

மதுரை காமராஜ் பல்கலையில் பல கோடி கட்டண மோசடி!


UPDATED : ஏப் 01, 2016 12:00 AM

ADDED : ஏப் 01, 2016 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 01, 2016 12:00 AM ADDED : ஏப் 01, 2016 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை காமராஜ் பல்கலையில் மாணவர் கட்டணம் செலுத்தும் முறையில் ரூ.பல கோடி மோசடி நடந்துள்ளது குறித்து உரிய விசாணை நடத்த வேண்டும் என செனட் (ஆட்சி பேரவை) கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

இக்கூட்டம் கன்வீனர் குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமையிலும், பதிவாளர் (பொறுப்பு) முத்துமாணிக்கம் முன்னிலையிலும் நேற்று நடந்தது.

இதில் உறுப்பினர்கள் பேசியதாவது:

முத்துச்செழியன் (முன்னாள் துணைவேந்தர்): சலான், டிராப்ட் மற்றும்இ பேங்கிங் மூலம் மாணவர் கட்டணம் செலுத்துகின்றனர். வங்கியில் செலுத்தும் தொகைக்கும், பல்கலை கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கும் வித்தியாசம் உள்ளது. சலான்களில் எண்கள் இல்லை. பல்கலை, வங்கி மற்றும் ஊழியர்கள் நெட் ஒர்க் ஏற்படுத்தி, இதுபோன்று 10 ஆண்டுகளுக்கு மேல் மோசடி நடக்கிறது. இதுகுறித்து இணை செயலர் அந்தஸ்தில் உயர்மட்டக் குழு அமைத்தோ அல்லது போலீசில் புகார் அளித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணம் செலுத்துவதில் புதிய நடைமுறை அமல்படுத்த வேண்டும்.

கண்ணன்: இந்த மோசடியில் எத்தனை கோடி ரூபாய் பல்கலைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தனியார் அமைப்பு மூலம் விசாரிக்க வேண்டும்.

ஆறுமுகம்: இப்பிரச்னைக்கு முடிவு கட்ட ஆன்லைன் மூலம் அனைத்து வகை கட்டணங்களையும் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். அந்தந்த மையங்களில் வங்கியில் கட்டணம் செலுத்தும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

வெங்கட்ராமன்: சென்னையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் சலான் பிரச்னை குறித்து உயர்கல்வி செயலர் அபூர்வாவிடம் விவாதித்து விசாரணை குழு அமைக்க பரிசீலிக்கப்பட்டது. கன்வீனர் கமிட்டி உறுப்பினர் ராமகிருஷ்ணன் இப்பிரச்னையை கவனிப்பார்.

முத்துச்செழியன்: பல்கலையில் கல்வித் தரம் கவலை அளிப்பதாக உள்ளது. தற்போது நாக் கமிட்டி சார்பில் வழங்கப்படும் கிரேடு முறைக்கு பதில் ரேங்கிங் முறை அமல்படுத்தப்பட உள்ளது. ஒரு பல்கலை ரேங்க் பெற்றால்தான் மானியங்கள் கிடைக்கும் சூழ்நிலை வரவுள்ளது. எனவே ஆராய்ச்சிகளை ஊக்குவித்து கல்வி தரத்தை மேம்படுத்துவது அவசியம். கல்வித்தரம் மேம்பாடு, கட்டண மோசடியை முக்கிய பிரச்னையாக கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம்: கணினி அறிவியல் துறையில் சரியான நெட் வொர்க் கிடைக்கவில்லை. டெக்னீசியன் உட்பட எவ்வித வசதியும் இல்லை. கழிப்பறை சுத்தப்படுத்தும் கட்டணம் முதல் மின் கட்டணம் வரை துறைத் தலைவர்கள்தான் செலுத்தும் நிலை உள்ளது. இப்படி இருந்தால் தரம் எங்கே மேம்படும். டீன், தனி அதிகாரி உட்பட பல பதவிகளுக்கு விதிமீறி ஜூனியர் பேராசிரியர்களை நியமிக்கின்றனர்.

அனிதா சிரோன்மணி: பயோ டெக்னாலஜி துறை ஆராய்ச்சி காப்புரிமைகள், கட்டுரைகள் விவரம், தனிச் செயல்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்ட போது காழ்ப்புணர்ச்சியால் பல்கலை நிர்வாகம் நிராகரித்துவிட்டது. இதுபோன்ற செயல்பாடுகளால் பல்கலை தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது.

தவமணி கிறிஸ்டோபர்: கட்டணம் செலுத்தும் முறையில் &'ஆன்லைன்&' முறையுடன் பிரத்யேக செயலி (ஆப்) பதிவிறக்கம் செய்து அதன்மூலம் செலுத்தும் வசதியும் அமல்படுத்த வேண்டும்.

ராமகிருஷ்ணன்: ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நேரு: பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி., நிர்ணயித்த ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.

நடராஜன்: செனட் கூட்டத்திற்கு உரிய அழைப்பு விடுக்க வேண்டும். பல்கலை பின்னடைவு பணியிடங்களை நிரப்ப தேர்வு வைத்து, மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். தரமான அலுவலர்கள் கிடைப்பார்கள்.

நேரு: மொட்டை கடிதம் அடிப்படையில் பேராசிரியர்கள் வாசு, ரவிக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெறவேண்டும்.

ராஜராஜன் (சிண்டிகேட் உறுப்பினர்): தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இதுமுடிவுற்ற பின் பேராசிரியர் பார்த்தசாரதி உட்பட மூன்று பேரின் சஸ்பெண்ட் உத்தரவுகளும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

நேரு: நன்னடத்தை விதி என்றால் செனட் கூட்டம் நடத்தலாமா. கூட்டம் முடிவில் உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கலாமா. இந்த உத்தரவை திரும்ப பெற கன்வீனர் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us