வங்கி, இன்சூரன்ஸ் துறை படிப்பு எப்போதும் உண்டு வேலைவாய்ப்பு!
வங்கி, இன்சூரன்ஸ் துறை படிப்பு எப்போதும் உண்டு வேலைவாய்ப்பு!
UPDATED : ஏப் 05, 2016 12:00 AM
ADDED : ஏப் 05, 2016 11:43 AM
மதுரை
: வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் எப்போதும் வேலைவாய்ப்புகள்
இருப்பதால் அத்துறை படிப்புகளுக்கு எப்போதும் எதிர்காலம் உள்ளது, என, மதுரை ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இணை பேராசிரியர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் வங்கி, இன்சூரன்ஸ் துறைகளின் எதிர்காலம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் வங்கித் துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிட வாய்ப்புகள் உருவாகின்றன. வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் நிதித்துறை எப்போதும் வளர்ச்சி அடையும் துறைகள். பி.காம்., மில் அக்கவுண்டிங், பிசினஸ் ஸ்டடிஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என பல பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்புகள்.
அடுத்த ஆண்டிற்குள் வங்கி, இன்சூரன்ஸ், காப்பீட்டு துறைகளில் ஏராளமானோர் ஓய்வு பெறுகின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் வங்கியில் மட்டும் பல லட்சம் காலிப் பணியிடங்கள் ஏற்படும். சிறந்த கட்டமைப்பு வசதியுள்ள, தகுதியான பேராசிரியர்கள், கால சூழலுக்கு ஏற்ற பாடத் திட்டங்களை மாற்றியமைக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். மதுரையில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி சிறப்பான கட்டமைப்பு வசதியுடன் செயல்படுகிறது, என்றார்.
