UPDATED : ஏப் 05, 2016 12:00 AM
ADDED : ஏப் 05, 2016 11:45 AM
திருப்பூர்
:
தேசிய அளவிலான வாலிபால் போட்டித்தேர்வுக்கு, திருப்பூர் பள்ளி மாணவி கிருபா தகுதி பெற்றுள்ளார்.
திருப்பூர்
இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி பிளஸ் 1 மாணவி கிருபா, மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகளில் பங்கேற்று, பல வெற்றிகளை பெற்றுள்ளார். மாவட்ட வாலிபால் கழகம் நடத்திய
போட்டித்தேர்வு வாயிலாக, திருப்பூர் அணியில் இடம் பிடித்த இவர்,
மாநில அளவிலான போட்டித்தேர்வுக்கு
முன்னேறினார். ஈரோட்டில் நடந்த போட்டியில் பங்கேற்று, தமிழக அணியில் இடம் பிடித்தார். பீகாரில் நடந்த தேசிய போட்டியில்
பங்கேற்று, வெற்றியும் பெற்றார்.
தற்போது, இந்திய வாலிபால் கழகம் நடத்தும் தேசிய அளவிலான போட்டித்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் இன்றும், நாளையும் நடக்கும் போட்டித்தேர்வில் வெற்றி பெற்றால், ஜூலையி தாய்லாந்தில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பது உறுதியாகும்.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, பள்ளி மாணவி ஒருவர், தேசிய அளவிலான போட்டித்தேர்வில் பங்கேற்பது, இதுவே முதன்முறை. மாணவி கிருபாவை, வாலிபால் கழக செயற்புரவலர் கண்ணன், வாழ்நாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், தலைவர் ரங்கசாமி, செயலாளர் தங்கமணி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
