UPDATED : ஏப் 09, 2016 12:00 AM
ADDED : ஏப் 09, 2016 10:56 AM
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் பெற, ஆண்டுதோறும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழ் நடத்தி வருகிறது. பிளஸ் 2முடித்தபின், உயர்கல்வி தேர்ந்தெடுக்க ஆலோசனை தரும் வகையில், வழிகாட்டி நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், இன்றும், நாளையும் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது.
தினமலர் நாளிதழுடன், பாரத் பல்கலை, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி குழுமம், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி, ஸ்ரீசக்தி கல்வி நிறுவனங்கள், நேரு கல்வி குழுமம், கே.எம்.சி.எச்., டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், நிப்ட்டீகல்லூரி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், ஆர்.வி.எஸ்., கல்வி குழுமங்கள் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
தமிழகத்தில்
உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன; உயர்கல்வி பற்றி அறிய, கல்வியாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு
நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, 10:00 முதல், 12:00 மணி வரை, கல்வியாளர்கள்
ஆலோசனை வழங்குவர். இரண்டு நாட்களும், இரவு,
7:00 மணி வரை கல்லூரி அரங்குகளைபார்வையிடலாம்;
அனுமதி இலவசம். பங்கேற்கும் அனைவருக்கும் தினமலர் வழிகாட்டி புத்தகம்
வழங்கப்படும்.
இன்றைய
நிகழ்வில்..
இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கும் கருத்தரங்கில், மெரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் சுரேஷ்குமார், கேரியர் கவுன்சிலிங் கல்வியாளர் ஜெயப் பிரகாஷ் காந்தி, சி.ஏ., ஐ.சி. டபிள்யு.ஏ., ஏ.சி.எஸ்., சரவண பிரசாத், அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் படிப்புகளின் எதிர்காலம் திருநாவுக்கரசு, ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் எதிர்காலம் ரமேஷ் பிரபா ஆகியோர் பேசுகின்றனர்.
நாளைய
தினம்
நாளை
(ஞாயிறு), காலை, 10:00 முதல், 12:00 மணி வரை நடக்கும் கருத்தரங்கில், கல்வி கடன் பெறுவது குறித்து வணங்காமுடி, வேளாண் படிப்பு குறித்து சுதாகர், இன்பர்மேஷன் டெக்னாலஜி பற்றி கணேஷ் மகாதேவன், சிவில் சர்வீஸ் படிப்பு எதிர்காலம் குறித்து, விஜய கார்த்திகேயன் ஆகியோர் பேச உள்ளனர்.
பள்ளி படிப்பை முடித்த பின், கல்லூரி வாழ்க்கையை துவங்க உள்ள மாணவ, மாணவியர், சிறந்த உயர்கல்வியை தேர்வு செய்வது மிக முக்கியம். அதற்கான ஆலோசனையை அள்ளித்தரும் பயனுள்ள இந்நிகழ்ச்சியில், மாணவ, மாணவியரும், பெற்றோரும் தவறாமல் பங்கேற்க, தினமலர் நாளிதழ், அன்போடு அழைக்கிறது.
