தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்!

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்!

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்!


UPDATED : ஏப் 09, 2016 12:00 AM

ADDED : ஏப் 09, 2016 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2016 12:00 AM ADDED : ஏப் 09, 2016 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீலகிரியில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், மாவட்டத்தில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது. 

ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் என, நான்கு வட்டாரங்களில், எஸ்.எஸ்.ஏ., ஆசிரியப் பயிற்றுனர்கள், அலுவலர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் கணக்கெடுப்புப் பணி நடக்க உள்ளது.

அவர்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள், குழந்தைகள் உதவி மையம், தொழிலாளர் மற்றும், சமூக நலத்துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் போலீசார் உதவி செய்வர்.

இரு மாதங்கள் நடத்தப்பட உள்ள கணக்கெடுப்பில், வீடு, வீடாக செல்லும் களப்பணியாளர்கள், பள்ளி செல்லாமல் உள்ள, 6 -14 வயது வரையுள்ள குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து வந்துள்ள வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்துவர். வீடுகள் மட்டுமல்லாமல், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தேயிலை தோட்டம் மற்றும் பிற தொழில் சார்ந்த இடங்களிலும் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

மக்கள் ஒத்துழைக்கணும்

துறை அலுவலர்கள் கூறுகையில், கண்டறியப்படும் அத்தகைய குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் அனைவரும், கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி, அவர்களது வயதுக்கேற்ற வகுப்பில், அருகே உள்ள பள்ளி மற்றும் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் நேரடியாக சேர்க்கப்படுவர். அதன் மூலம், அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க முடியும். கணக்கெடுப்பை மேற்கொள்ளும் அலுவலர்கள், தங்கள் பகுதிக்கு வரும் போது, அங்குள்ள மக்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விபரங்களை தெரிவித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றனர்.

தகவல் தெரிவிக்க...

பள்ளி செல்லா மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் குறித்த தகவல்களை, ஊட்டி வட்டத்தில், 0423-2448253, குன்னுார் வட்டத்தில், 0423-2206252, கோத்தகிரி வட்டத் தில், 04266-272360, கூடலுார் வட்டத்தில், 04262-268115 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us