தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கல்

பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கல்

பட்டயப்படிப்பு சான்றிதழ் வழங்கல்


UPDATED : ஏப் 09, 2016 12:00 AM

ADDED : ஏப் 09, 2016 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2016 12:00 AM ADDED : ஏப் 09, 2016 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: நிகழ்ச்சி மேலாண்மை பட்டயப்படிப்பு முடித்த தாகூர் கலைக் கல்லுாரி மாணவ
, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக் கல்லுாரியில், பட்டப் படிப்பு படிக்கும் போதே வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியுடன், 6 மாத நிகழ்ச்சி மேலாண்மை பட்டயப்படிப்பு நடத்தப்படுகிறது. 

படிப்பு முடித்தவர்களுக்கு, புதுச்சேரி பல்கலைக்கழக அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு, பட்டப் படிப்பு பாதிக்காத வகையில், மாலை நேரங்களில் பாடம் நடத்தப்பட்டது. ஐந்தாவது பேட்ஜ் முடித்தவர்களுக்கு சமீபத்தில் தேர்வு நடத்தப் பட்டது.

வெற்றி பெற்ற 16 பெண்கள் உட்பட 44 பேருக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி கருத்தரங்க அறையில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி, சான்றிதழ் வழங்கி, பாராட்டினார். 

துறைத் தலைவர் பிரதிமா குமாரி தாஸ் வரவேற்றார். நிகழ்ச்சி மேலாண்மை படிப்பு ஒருங்கிணைப்பாளர் தேவபாலன் நன்றி கூறினார். இதுவரை, இப்படிப்பை, பி.காம்., மற்றும் பி.பி.ஏ., மாணவர்கள் 127 பேர் முடித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us