UPDATED : ஏப் 09, 2016 12:00 AM
ADDED : ஏப் 09, 2016 11:23 AM
அனுப்பர்பாளையம்
:
திருப்பூர் மனவளக்கலை யோகா அறக்கட்டளை சார்பில், திருமுருகன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு
பண்பாட்டு கல்வி கற்றுக்கொடுக்க, புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்யப்பட்டது.
திருப்பூர்
மனவளக்கலை யோகா அறக்கட்டளை சார்பில், அரசு
மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்பது மற்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு யோகமும், இளைஞர் வல்லமையும் என்ற பண்பாட்டு கல்வி
கற்பிக்கப்படுகிறது.
இக்கல்வியை
நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு
கற்றுக்கொடுக்க, மனவளக்கலையினர்,
பள்ளி நிர்வாகத்தினரிடம் புரிந்துணர்வு
ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மனவளக்கலை மண்டல தலைவர் காளியப்பன்,
மனவளக்கலை அறக்கட்டளை பொருளாளர்
பாலகிருஷ்ணன், பண்பாட்டு கல்வி
திருப்பூர் துணை தலைவர் தேவராஜ், பள்ளி நிறுவனர்
மோகன், தாளாளர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் கூறுகையில், மாணவ, மாணவியருக்கு உடற்பயிற்சி, தியானம், பண்பு நலன்கள் மற்றும் ஒழுக்கம் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படும், என்றார்.
