தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை கண்காணிக்கும் மாணவர்கள்

மாணவர்களை கண்காணிக்கும் மாணவர்கள்

மாணவர்களை கண்காணிக்கும் மாணவர்கள்


UPDATED : ஏப் 09, 2016 12:00 AM

ADDED : ஏப் 09, 2016 11:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2016 12:00 AM ADDED : ஏப் 09, 2016 11:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இயற்கை அன்னையின் மடியில் தவழும், எத்தனையோ கிராமங்கள் வால்பாறையில் இருந்தாலும், நாள் முழுவதும் பசுமையை தாலாட்டிக்கொண்டிருக்கும் ஒரே கிராமம், வறட்டுப்பாறை எஸ்டேட் தான்.

கிராமத்தை சுற்றிலும் அதிக அளவில் அரிய வகை மரங்களும், தேயிலை, காபி செடிகளும் அடர்த்தியாக உள்ளன. இயற்கையை நேசிக்கும் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது வறட்டுப்பாறை அரசு ஆரம்பப்பள்ளி. இப்பள்ளியில் தற்போது, 22 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தொழிலாளர்களின் குழந்தைகள் தான். 

தமிழக அரசு ஏழை, எளிய மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில், இது போன்ற பள்ளிகளை திறந்து, அதற்கான நிதியுதவியும் அளித்து வருகிறது.

இப்பள்ளி கடந்த 12, ஆண்டுகளில் பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதோடு, மாணவர்களே ஆர்வத்தோடு கல்வி பயில வரும் சூழலாகவும் மாறியுள்ளது. மாணவர்களை பள்ளித்தலைமை ஆசிரியை குளோரி மற்றும் ஆசிரியர்களே முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச்செல்கின்றனர்.

பள்ளியின் சிறப்புகள்

மாணவர்களுக்கு நற்பண்புகளை, கற்றுத்தருவதும், அதனை பின்பற்ற சொல்வதும் ஆசிரியர்கள் அதனை கண்காணிப்பதும் வழக்கமான ஒன்று. இப்பள்ளியில் மாணவர்களே கண்காணிப்பு பணிகளிலும், ஈடுபட்டு, மற்ற மாணவர்களையும் சுகாதார பழக்கங்களை பின்பற்றச்செய்கின்றனர். மாணவர்களின் கல்வித்திறன்களை வளர்க்கும் வகையில், அவர்களுக்கு ஏ.பி.எல்., மற்றும் எஸ்.ஏ.பி.எல்., முறையில் பாடம் சொல்லித்தரப்படுகிறது.

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அவர்களுக்கு, நாள் தோறும் காலை, மாலை யோகா பயிற்சி, கலை இலக்கியம், ஓவியம், போன்றவை கற்றுத்தரப்படுகின்றன. காலை நேரத்தில் தேசிய கொடி ஏற்றியபின், அன்றாடம் நாளிதழில் வெளியான செய்திகளை மாணவர்கள் அறியும் வண்ணம் அவர்களுக்கு படித்து காண்பிப்பது, மாணவர்களிடையே நல்லொழுக்கம் ஏற்படும் வகையில், அவர்களுக்கு அறிவு சார்ந்த கதைகளும் சொல்லித்தரப்படுகின்றன.

மாணவர்களை சிற்பியாக்கும் ஆசிரியர்கள் இப்பள்ளி தலைமை ஆசிரியை குளோரி கூறியதாவது: 

பள்ளியில் பயிலும் மாணவர்களை, எங்கள் குழந்தைகளாக பாவித்து, அவர்களின் கல்வித்தரம் உயர மாணவர்களை தரம் பிரித்து பாடம் நடத்துகிறோம். இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒவ்வொரு தனித்திறமை உள்ளது. அதை கண்டறிந்து மாணவர்கள் விரும்பிய படி அவர்களுக்கு பாடம் சொல்லித்தருகிறோம். மாணவர்களை நாள் முழுவதும் ஆசிரியர்கள் அரவணைத்து செல்வதால், மாணவர்களின் கல்வித்தரமும் உயர்ந்து வருகிறது.

சுத்தம் சுகம் தரும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அவர்களுக்கு பல்வேறு உதவிகளை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். எம் பள்ளியில் படிக்கும் மாணவர்களை சிறந்த சிற்பியாக்கி, அவர்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று அழகு பார்ப்பது தான் எங்களின் தலையாய கடமை.இவ்வாறு, குளோரி பெருமையுடன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us