UPDATED : ஏப் 11, 2016 12:00 AM
ADDED : ஏப் 11, 2016 10:52 AM
அ நிறம் | அளவு
மாரண்டஹள்ளி
:
மாரண்டஹள்ளியில், உலக சுகாதார தின
விழாவையொட்டி, நீரிழிவு
அதிகரிப்பை நிறுத்துவது தேவை என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய
வளாகத்திலுள்ள, மகப்பேறு உதவி
செவிலியர் பயிற்சி பள்ளியில் நடந்தது.
சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ்குமார் தலைமை வகித்தார். பஞ்சப்பள்ளி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் பிருத்திவிராஜ், நீரிழிவு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பில் இயற்கை மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
