தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி கடன் பெற அணுகுமுறை அவசியம்

கல்வி கடன் பெற அணுகுமுறை அவசியம்

கல்வி கடன் பெற அணுகுமுறை அவசியம்


UPDATED : ஏப் 11, 2016 12:00 AM

ADDED : ஏப் 11, 2016 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2016 12:00 AM ADDED : ஏப் 11, 2016 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கனரா வங்கி மேலாளர் வணங்காமுடி, கல்வி கடன் குறித்து பேசியதாவது:

வங்கியில் கல்வி கடன் பெற, சரியான வழிமுறையை பின்பற்ற வேண்டும். கடன் பெறுவதை, சிலர் கவுரவ குறைச்சலாக நினைக்கின்றனர். வாழ்க்கையில் முன்னேற, பொருளாதார ஆதரவு முக்கியம். கடன் வாங்குவதில் தவறு இல்லை; வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

குழந்தைகள், கஷ்டம் தெரியாமல் வளர வேண்டும்; வாழ வேண்டும் என, பெற்றோர் தங்களை வருத்தி, வறுமையை தெரியப்படுத்தாமல் வளர்க்கின்றனர். இது, தவறு. பணத்தின் மதிப்பும், அருமையும், மரியாதையும் தெரியாமல் வளரும் குழந்தைகளே, பிற்காலத்தில் கஷ்டப்படுவர். வங்கிகள் கல்வி கடன் தருவதன் முக்கிய நோக்கம், பொருளாதார வசதி இல்லாததால், ஒரு மாணவனின் மேல்படிப்பு எந்த சூழலிலும் தடைபடக்கூடாது என்பதே.

முதலில், குழந்தை படிக்க வேண்டிய படிப்பை, ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்; எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கையிருப்பு போக, வங்கியில் பெற வேண்டிய கடனை முடிவு செய்ய வேண்டும். மேனேஜ்மென்ட் கோட்டா, கவுன்சிலிங் கோட்டா என, எந்த வகையில் படித்தாலும், வங்கியில் கல்வி கடன் கிடைக்கும்.

மேனேஜ்மென்ட் கோட்டாவில், கட்டணம் அதிகம்; கடனுக்கு வட்டி கட்டாயம் கட்ட வேண்டும். ஆனால், கவுன்சிலிங் கோட்டாவில், கட்டணம் குறைவு; கடனுக்கு வட்டி கிடையாது. வங்கியில் கடன் பெற, மாணவன் அல்லது மாணவி பெயரில், பான்கார்டு முக்கியம்; 18 வயது பூர்த்தியாகாதவர் எனில், போட்டோ இன்றி பான்கார்டு கிடைக்கும். 18 வயதான பின், போட்டோ சேர்க்கப்படும்.

வங்கியில், அப்பா அல்லது அம்மா பெயரில், மாணவனுக்கு ஜாயின்ட் அக்கவுண்ட் துவங்க வேண்டும். குடும்பத்தில் முதல் பட்டதாரி எனில், அதற்கான சான்றிதழ், தாசில் தாரிடம் பெற வேண்டும்; கவுன்சிலிங்&'கில் அச்சான்றிதழை காட்டினால், கட்டணத்தில், 20 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

வருமான சான்று பெற வேண்டும். தொழில் சார்ந்த படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, குடும்ப ஆண்டு வருமானம், 4.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால், கல்வி கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு, குடும்ப ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருப்பின், கட்டணம் முற்றிலும் நீக்கப்படும்.

கல்வி கடன் பெறுவதற்கு தேவையான சான்றிதழ் பெற, இப்போதே அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். கல்லூரியில் சேரும்போது, முயற்சி செய்தால், நேரம் விரயமாகும். வங்கிகளுக்கு கடன் கேட்க செல்லும்போது, அணுகுமுறை மிக முக்கியம்; நல்ல அறிமுகம் செய்துகொள்ள வேண்டும். கல்வி கடன் கொடுக்கக்கூடாது என்ற நோக்கில் எந்த வங்கியும் செயல்படுவதில்லை.

கடன் பெற செல்பவர்களே, தவறான அணுகுமுறையால் கெடுத்துக் கொள்கின்றனர். அணுகுமுறையை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us