UPDATED : ஏப் 12, 2016 12:00 AM
ADDED : ஏப் 12, 2016 11:06 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்
:
மேட்டூரில், நகராட்சி துவக்கப்பள்ளி திறக்க
தாமதமானதால், நுழைவாயில் முன், மாணவர்கள் காத்து கிடந்தனர்.
மேட்டூர், பொன்னகர் நகராட்சி துவக்கப்பள்ளியில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு, நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், நுழைவாயில் கதவு பூட்டப்பட்டு கிடந்ததால், புத்தக பைகளை சுமந்து கொண்டு, நீண்ட நேரம், மாணவர்கள் காத்திருந்தனர்.
இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ஆசிரியர்கள், பள்ளியை திறக்க தாமதம் செய்கின்றனர். இதனால், தினமும் மாணவர்கள் நுழைவாயில் வெளியே காத்து கிடக்கும் அவல நிலை உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக, பள்ளியை திறக்க, ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
