தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக சுமையை குறைக்க உத்தரவு: சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

புத்தக சுமையை குறைக்க உத்தரவு: சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

புத்தக சுமையை குறைக்க உத்தரவு: சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு சுற்றறிக்கை


UPDATED : ஏப் 20, 2016 12:00 AM

ADDED : ஏப் 20, 2016 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2016 12:00 AM ADDED : ஏப் 20, 2016 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கல்வியாண்டு வகுப்புகள் துவங்கிவிட்டன. பெற்றோரிடம் நன்மதிப்பை பெற வேண்டும் என, பெரும்பாலான பள்ளிகள், பாடத்திட்டத்தில் இருப்பதற்கும் அதிகமான புத்தகங்களை வாங்கி, மாணவர்களிடம் சுமத்திவிடுகின்றனர். 

இவற்றை தினமும் பள்ளிக்கும் வீட்டுக்கும் எடுத்து வருவதற்கு, மாணவர்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு கற்றலில் பெரும் சுமையாக உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையில், அதிக கவனம் செலுத்தும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு, சி.பி.எஸ்.இ., அலுவலகத்திலிருந்து சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

தினமும் அன்றைய கால அட்டவணைப்படி, உள்ள புத்தகங்களை மட்டுமே எடுத்துச்செல்ல, பெற்றோரும் ஆசிரியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடத்திட்டத்தில், என்.சி.இ.ஆர்.டி., அறிவுறுத்தியுள்ள விதிகளின்படியே, புத்தகங்களின் எண்ணிக்கையும், அளவும் இருக்க வேண்டும். அவற்றையும், பள்ளிகளில் அலமாரி அமைத்து, அங்கேயே வைத்துக்கொள்ளவும், வீட்டுப்பாடம் செய்யும் புத்தகங்களை மட்டும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். 

வீட்டுப்பாடமும் அதிக அளவில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்களின் ஆரோக்கியம் முக்கியம் என்பதால், அவற்றை காக்க, புத்தக சுமையை குறைப்பது அவசியம். இது கற்றலில் குழந்தைகளை மேலும் மேம்படுத்தும். இதனால், அனைத்து பள்ளிகளும், மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பது குறித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us