UPDATED : ஏப் 20, 2016 12:00 AM
ADDED : ஏப் 20, 2016 10:58 AM
நாமக்கல்:
வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை
காத்துக் கொள்ள மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே, 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் சிறுவர், சிறுமியர், மாணவர்கள் என பலரும், வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள நீச்சல் பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள், சிறுவர்கள் என, பலரும், நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முறையாக நீச்சல் பயிற்சி பெறுவதுடன், வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும் முடிவுகிறது என்பதால், மாணவர்கள் நீச்சல் குளத்துக்கு படையெடுக்கின்றனர்.
