பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு
பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு
UPDATED : ஏப் 21, 2016 12:00 AM
ADDED : ஏப் 21, 2016 11:14 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி
:
தர்மபுரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சார்பாக, மாவட்டத்தில், ஆறு வயது முதல், 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு, தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய, எட்டு ஒன்றியங்களில் நடந்து வருகிறது. கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் பள்ளி செல்லா குழந்தைகளை அறிந்து, அவர்களின் வயதிற்கு ஏற்ப அப்பகுதியில் உள்ள பள்ளிகள், சிறப்பு பயிற்சி மையங்கள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உறைவிட பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
