தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10, பிளஸ் 2 புத்தகம் விநியோகம்

10, பிளஸ் 2 புத்தகம் விநியோகம்

10, பிளஸ் 2 புத்தகம் விநியோகம்


UPDATED : ஏப் 22, 2016 12:00 AM

ADDED : ஏப் 22, 2016 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2016 12:00 AM ADDED : ஏப் 22, 2016 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்
: தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்காக 82 லட்சம் பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநுால் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், தனியாக விண்ணப்பித்து பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதுபோல் 10 ஆயிரத்து 900 பள்ளிகள் இதுவரை பதிவு செய்துள்ளன. அரசு பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதே போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 58 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தாலுகா அலுவலகங்கள், கேபிள் டிவி பொது இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து புத்தகங்களை பெறலாம்.

ஆன்லைனில் பதிவு செய்து பெற விரும்புவோர் www.textbookcorp.in என்ற இணையதளத்தில் புத்தகங்களின் இருப்பை அறிந்து பணம் செலுத்தி பதிவு செய்தும் பெறலாம். 72 மணி நேரத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us